Post by anuja on Jul 3, 2012 21:34:04 GMT 5.5
அணு ஆய்வு நிறுவன பணிவாய்ப்பு
இந்திய அரசின் அணு ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். இந்தியாவின் மின்சாரத் தேவைகளை அணு ஆராய்ச்சி மையங்களின் மூலமாக உற்பத்தி செய்வது இந்த நிறுவனத்தின் தலையாய பணியாக உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள ஸ்டைபண்டரி டிரெய்னி காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் :என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தில் ஸ்டைபண்டரி டிரெய்னி - சயின்டிபிக் அசிஸ்டன்ட் 'பீ' பிரிவில் மெக்கானிகல் இன்ஜினியரிங்கில் 11, எலக்ட்ரிகல் பிரிவில் 3, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷனில் 4, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் இயற்பியல் பிரிவுகளில் தலா ஒரு இடமும் சேர்த்து மொத்தம் 20 காலி இடங்கள் உள்ளன.
இதே பிரிவைச் சார்ந்த டெக்னீசியன் 'பீ' பிரிவில் எலக்ட்ரீசியனில் 4, எலக்ட்ரானிக்ஸில் 7, மெக்கானிக் மெஷின், டூல் மெயின்டனென்ஸ், பைப் பிட்டர் ஆகிய பிரிவில் 13, டிராப்ட்ஸ்மேன் பிரிவில் 4 இடங்கள் சேர்த்து மொத்தம் 28 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: இந்திய அணுசக்தி மையத்தின் சயின்டிபிக் அசிஸ்டன்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.05.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். டெக்னீசியன் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே தேதியில் 18 வயது நிரம்பியவராகவும் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். சயின்டிபிக் அசிஸ்டன்ட் பதவியின் முதல் நான்கு பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய துறையில் டிப்ளமோ அல்லது லைசென்சியேட் படிப்பை முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு ஐ.டி.ஐ., படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
மற்றவை: என்.பி.சி.ஐ.எல்., நிறுவன காலி இடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலேயே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு 20.07.2012க்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:
Manager (HR),
HRM Section, Nuclear Power Corporation of India Ltd.,
Madras Atomic Power Station,
Kalpakkam - 603 102.
Kanchipuram District.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.07.2012
இணையதள முகவரி : www.npcil.nic.in/main/JobsRecent.aspx